
நடிகை மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 படத்தின் போஸ்டரை வெளியிட்டு, இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
த்ரிஷ்யம் 3 திரைப்படம் இந்த மாதம் வெளியாகுமென கடந்த ஜனவரியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியடைந்தன.
இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் த்ரிஷ்யம் 3 குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை மீனாவின் பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 படத்தின் போஸ்டரை வெளியிட்டு, இயக்குநர் ஜீத்து ஜோசப், “பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் மீனா” எனக் கூறியுள்ளார்.
அந்தப் போஸ்டரில் எங்களது ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.