Eggoz நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய Nitrofuran இருப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோவிற்குப் பிறகு, முட்டை வாங்குவதிலும், சாப்பிடுவதிலும் பயம் எழுகிறது.
இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள முட்டைகளை ஆய்வு செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்னெடுப்பு ஒன்றைக் கையிலெடுத்துள்ளது.
அதன் படி, இந்தியாவில் உள்ள பிராண்டட் மற்றும் பிராண்ட் அல்லாத முட்டைகளின் சாம்பிள்களை பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி பெறப்பட்ட முட்டைகள் இந்தியா முழுவதும் உள்ள 10 ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

ஏன் பிரச்னை?
நைட்ரோஃபுரான் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியதாகும். கடந்த மார்ச் மாதம், இந்திய அரசு நைட்ரோஃபுரான் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, விநியோகம் போன்றவற்றிற்கு முழுவதும் தடை விதித்தது.
இந்த நிலையில் தான், முட்டைகளில் நைட்ரோஃபுரான் இருப்பதாக வீடியோ ஷேர் ஆனது.
Eggoz நிறுவனத்தின் அறிக்கை
Eggoz நிறுவனம் தங்களது முட்டைகளை ஆய்வு செய்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்களது முட்டையில் இந்த மாதிரியான எந்த கலப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.