Gw3vxpqWUAAlMVU

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆல் ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் முதல் சதமடித்தார். ஜடேஜாவும் சதமடித்து அசத்தினார்.

206 பந்துகளைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இமாலய இலக்கை சேஸிங் செய்த முதல் ஓவரிலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோத்த கே.எல்.ராகுல் – ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை விக்கெட்டினை இழக்காமல் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Unbeaten tons from Ravindra Jadeja and Washington Sundar helped India secure a brilliant draw in Manchester

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest