sudi

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஏன் மொட்டை அடித்தேன் என நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெற்றிப் பாதையில் ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி திரைப்படம் கடந்த செப்.5ஆம் தேதி வெளியானது. ருக்மணி வசந்த் நாயகியாகவும் வித்யூத் ஜமால் வில்லனாகவும் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

இவரது கடைசி இரண்டு திரைப்படங்கள் வணிக ரீதியாக சோபிக்காத நிலையில், இந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தப் படம் நல்ல விமர்சனங்களால் வசூலிலும் அசத்தி வருகிறது. இந்நிலையில், அவர் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

மொட்டை அடித்தது ஏன்?

முதல் படம் தீனாவுக்காக பழநி முருகனிடம் சென்றேன். அதற்குப் பிறகு இப்போது அங்குச் சென்றபோது மொட்டை அடித்தேன். நூறு சதவிகிதம் படம் வெற்றியடையவும் ரசிகர்கள் படத்தை ஏற்றுக்கொள்ளவும் வேண்டினேன்.

இந்தப் படம் எனக்குக் கிட்டதட்ட முதல்படம் மாதிரிதான். ஏனெனில் கரோனா காலக்கட்டதில் மிகவும் பயந்துவிட்டேன். அப்போதிலிருந்து என்னுடைய இரண்டு படங்கள் முன் தயாரிப்பு வரை சென்று படமாக மாறவில்லை. அதனால், இந்தப் படம் வெற்றியடைய காத்திருந்தேன்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிகமாக புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

Director A.R. Murugadoss has answered in an interview why he shaved his head.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest