1369582

வாஷிங்டன்: பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.

அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாத ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், உங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளும் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வரிகள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest