
வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
சீனாவின் டிக் – டாக் உடன் அமெரிக்காவுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்வதற்காக அதிபர் ஸி ஜின்பிங் உடன் வெள்ளிக்கிழமை பேசவுள்ளேன்.
எங்கள் இரு நாடுகளுக்கும் மிகச்சிறந்த வணிக ஒப்பந்தமாக இது இருக்கும். கடந்த காலங்களின் ஒப்பந்தங்களை விட வித்தியாசமானதாகவே அமையும். எங்களிடம் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளன.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் வரி விவகாரம் முடிவுக்கு வரும். உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் செல்வந்த நாடாக அமெரிக்கா இருக்கும். வரி விதிப்பில் பேரம் பேசும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. வரி விதிப்பின் மூலம் 7 போர்களை நிறுத்தியுள்ளேன். அதில் 4 நாடுகளுடன் அமெரிக்கா வணிகம் செய்து வருகிறது.
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு இணங்கியுள்ளார். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்