rajendra-balaji

விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சிவகாசியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். விஜய் தனித்து நின்று போட்டியிட்டால் தமிழக வெற்றிக்கழகத்தை திமுக அழித்து விடும். விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமானால் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்.

எம்ஜிஆருக்கு பிறகு திரையுலகில் இருந்து வந்தவர்களில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் விஜயகாந்த். தேமுதிக ஆரம்பித்தபோது மதுரையில் அவருக்கு கூடிய கூட்டம் அளப்பரியது. விஜயகாந்துக்கு பக்குவபட்ட தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால் விஜய்க்கு அதுபோன்ற தொண்டர்கள் இல்லை. விஜய்க்கு கூட்டம் வருவது உண்மைதான்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் அதைவிட அதிகமாக வரும். ரஜினிக்கு கூடாத கூட்டம் இல்லை. அவருக்கு இன்றைக்கும் கூட்டம் வரும். விஜய் தனித்து நின்று எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. அவருடைய முயற்சியெல்லாம் வீணாகத்தான் செல்லும்.

தேர்தலில் திமுக, தவெகவிற்கு மட்டுமே போட்டி என விஜய் கூறுவது உண்மைதான். ஆனால் முதலிவடத்திற்கு அல்ல இரண்டாவது இடத்திற்கு. ஸ்டாலினுக்கு மாற்றாக 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Former minister K.T. Rajenthra Bhalaji has said that more people will come to see Rajinikanth and Ajith than they did for Vijay.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest