GSLV_F16__6

கோவை : விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும். இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட் களை அனுப்ப உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவுள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவிகிதம் சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest