PTI09202025000063B

வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் எதிரி என்றும், தன்னம்பிக்கைதான் மருந்து என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்ச்சித் திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

எனது பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்தாண்டில் ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக, சந்தைகளில் அதிக வளர்ச்சி காணப்படும்.

பிரதமர் மோடி

இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு மருந்துதான். அது தன்னம்பிக்கைதான். வளர்ச்சிக்கு தன்னம்பிக்கைதான் மிக முக்கியம்.

உலகில் நமக்கு பெரிய எதிரி என்று யாரும் இல்லை. நமக்கு எதிரி இருந்தால், அது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப்பெரிய எதிரி. இதனைத்தான் நாம் தோற்கடிக்க வேண்டும்.

வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, நாட்டின் தோல்வியும் அவ்வளவு அதிகமாக இருக்கும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும்.

140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுச் செல்ல முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்திருப்பதை நாம் விட்டுவிட முடியாது. எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் ஆபத்தில் ஆழ்த்த முடியாது. நூறு துயரங்களுக்கு ஒரே மருந்து மட்டுமே உள்ளது, அதுதான் தன்னம்பிக்கை இந்தியா.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும், முழு வெற்றியையும் பெறவில்லை. நாட்டை உலக சந்தையிலிருந்து காங்கிரஸ் அரசு தனிமைப்படுத்தியது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோரிக்கணக்கான மதிப்புள்ள மோசடிகள் நடத்தப்பட்டன.

காங்கிரஸ் அரசின் கொள்கைகள், இளைஞர்களுக்கு பெரும் தீங்கினை விளைவித்தன. அவர்களின் கொள்கைகள், இந்தியாவின் உண்மையான வலிமையை வெளிப்படுவதைத் தடுத்தன என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

“This Is Our Biggest Enemy”: PM On How India Will Move Forward

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest